/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு! கை கொடுக்கும் மகளிர் சுய உதவி குழு
பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு! கை கொடுக்கும் மகளிர் சுய உதவி குழு
கோவையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று கோவை குற்றாலம். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு உணவு சாப்பிடுவதற்கான எந்த வசதியும் இல்லை. இந்த குறையை போக்க வனத்துறை சார்பில் பழங்குடியின பெண்களின் மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் சிறிய கியாஸ் வேன் வாங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கோவை குற்றால அருவியின் பார்க்கிங் பகுதி வரை இந்த வாகனத்தில் அழைத்து சென்று வருகிறார்கள். மேலும் விரைவில் மகளிர் சுய உதவி குழு வாயிலாக சிறிய கேண்டீன்களும் நடத்தப்பட உள்ளன. பழங்குடியின பெண்களின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 03, 2026