உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டுக்கூடு விலை குறைவால் கர்நாடகா செல்லும் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள்

பட்டுக்கூடு விலை குறைவால் கர்நாடகா செல்லும் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள்

பட்டுக்கூடு விலை குறைவால் கர்நாடகா செல்லும் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் | Damage of sericulture production உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளில் வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில் அதிகளவு நடக்கிறது. இப்பகுதிகளில் 2,778 ஏக்கர் பரப்பளவில் பட்டுப்புழுக்கள் உண்ணும் மல்பெரி செடி சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் 1,221 பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக மாதம் தோறும் பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டுக்கூடு உற்பத்தியாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் முட்டை வித்தகங்களிலிருந்து இளம் புழு வளர்ப்பு மனைகளில் முட்டை பொரித்த 7 நாள் புழுக்கள் வழங்கப்படுகிறது. பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்கள் புழுக்கள் வளர்க்கின்றனர். அதன்பின்பு வெண்பட்டு கூடுகளை தொழிலாளர்கள் பிரித்தெடுத்து விற்பனைக்காக அனுப்புகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பால் புழு இறப்பு, புழுக்கள் மல்பெரி தழை உணவு எடுக்காமல், பகல் முழுவதும் வெயிலுக்கு சுருண்டு மயங்கிய நிலையில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் மட்டுமே உணவு எடுப்பதால் புழு வளர்ச்சி மற்றும் கூடு கட் டுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. பட்டுக்கூடு விலையும் கடும் சரிவை சந்தித்தித்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழக மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ 350 முதல் 450 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது. பட்டு வளர்ப்பு தொழிலில் ஆண்டுக்கு 8 முறை மட்டுமே கூடு உற்பத்தி செய்ய முடியும். தற்போது வெயிலின் தாக்கம், பனிப்பொழிவு மற்றும் சுண்ணாம்பு கட்டி நோய் பாதிப்பு நிலவுதால் 30 சதவீதம் வரை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கூடு விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. உற்பத்தி செலவினம் அதிகரிப்பால் குறைந்தபட்சம் ஒரு கிலோ கூடு 600 ரூபாய் வரை விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். நோய் தாக்கம், உற்பத்தி பாதிப்பு, விலை சரிவால் கடும் நஷ்டம் அடைந்து வரும் உற்பத்தியாளர்களுக்கு அரசு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மார் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை