கம்பு சுற்றி கலக்கும் இளம் வீராங்கனைகள் | Silambam Compatition | Covai
கம்பு சுற்றி கலக்கும் இளம் வீராங்கனைகள் / Silambam Compatition / Covai கோவை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. இதில் பள்ளி மாணவிகளுக்கான சிலம்பம் மற்றும் மாணவர்களுக்கான ஜூடோ போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இரு போட்டிகளிலும் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட 40 கிலோ எடைக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கான ஜூடோ போட்டியில் இர்பான் அகமது, சிபி ஜோசுவா, முகமது இர்பான் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அரிஹந்த், முகமது சிபின், ரித்திக் ஆகியோர் 45 கிலோக்கும் குறைவான எடை பிரிவிலும், தீபக், தியாகராஜன், நிதீஷ் ஆகியோர் ஆகியோர் 50 கிலோவுக்கும் குறைவான பிரிவிலும், நலன், தினேஷ், சக்தி ஆகியோர், 55 கிலோவுக்கும் குறைவான எடை பிரிவிலும் முதல் மூன்று இடங்களை வென்றனர். அதேபோல் 19 வயதுக்கு உட்பட்ட 40 கிலோவுக்கும் கீழ் உள்ள எடைப் பிரிவில் அருண்குமார், சிமில் அகமது, விகாஷ் ஆகியோரும், 45 கிலோவுக்கும் கீழ் உள்ள எடைப் பிரிவில் சிவகார்த்திகேயன், ஸ்ரீகிரிஷ், சஞ்சய் ஆகியோரும், 50 கிலோவுக்கும் கீழ் உள்ள எடைப் பிரிவில் சல்மான் பாரிஸ், இர்பான் உல்ஹக், ஸ்ரீஹரி ஆகியோரும், 55 கிலோவுக்கும் கீழ் உள்ள எடைப் பிரிவில் பாதில் ரஹ்மான், வேல்குமார், குகன் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை தட்டிசென்றனர். சிலம்பம் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் 30 கிலோவுக்கும் கீழ் உள்ள எடைப் பிரிவில் ஸ்வேதாம்பரி, சுபிக்ஷா, மதுவர்ஷினி ஆகியோரும், 35 கிலோவுக்கும் கீழ் உள்ள பிரிவில் மதுஸ்ரீ, பிரவீனா, தன்சியா ஆகியோரும், 40 கிலோவுக்கும் கீழ் உள்ள பிரிவில் ஹர்சினி, வினய், ஜெயலட்சுமி ஆகியோரும், 45 கிலோவுக்கும் கீழ் உள்ள ஹரிஷ்மிதா, காவியா தர்ஷினி, ஸ்ரீவர்சனா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கிறது.