/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வாழ்ந்து காட்டுகிற பெற்றோராக மாறினால் இளைய சமுதாயம் முன்னேறும்
வாழ்ந்து காட்டுகிற பெற்றோராக மாறினால் இளைய சமுதாயம் முன்னேறும்
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் முதல் பாடம் இந்த உயிர் விலைமதிப்பற்றது என்பது தான். ஆனால் இந்த காலத்து குழந்தைகள் கையில் மொபைல் தான் இருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட காண்பிக்கப்படும் காட்சிகளைத் தான் அந்த குழந்தைகள் பார்க்கின்றன. இதை தடுக்கும் பொறுப்பு பெற்றோரிடம் தான் இருக்கிறது. குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்ற ஆசை பெற்றோருக்கு உள்ளது. ஆனால் வாழ்வியல் கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்களா என்று கேட்டால் சந்தேகம் தான். வழிகாட்டுகிற பெற்றோராக இல்லாமல் வாழ்ந்து காட்டுகிற பெற்றோராக மாறினால் இளைய சமுதாயம் முன்னேறும் என்கிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் லட்சுமி காந்தன். அது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 02, 2024