உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இது குளமா இல்லை கழிவுநீர் குட்டையா?

இது குளமா இல்லை கழிவுநீர் குட்டையா?

கோவை மாநகராட்சியில் உள்ள சிங்காநல்லுார் குளம் சாக்கடை நீரால் மாசுபட்டுள்ளது. அந்த குளத்துக்கு வரும் நொய்யல் ஆற்று தண்ணீர் சில ஆண்டுகளுக்கு முன்பு தடைபட்டது. சிங்காநல்லுார் குளத்தை துார் வார வேண்டும் என்று 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் சிங்காநல்லுார் குளத்தையொட்டி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் எந்த பலனும் இருக்கப்போவது இல்லை. ஏனென்றால் சிங்காநல்லுார் குளத்தை துார் வாராமல் சுத்திகரிக்கப்படும் தண்ணீரை அதில் விடுவதில் எந்த பலனும் இல்லை. சிங்காநல்லுார் குளத்தை துார் வாரி நொய்யல் ஆற்றுத்தண்ணீரை அதில் விட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துவதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ