உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காணாமல் போன நீர்வழிப்பாதை... கவலையில் மக்கள் | மூழ்கும் குடியிருப்பு

காணாமல் போன நீர்வழிப்பாதை... கவலையில் மக்கள் | மூழ்கும் குடியிருப்பு

கோவை மாவட்டம் அன்னுார் பேரூராட்சியில் உள்ள அன்னுார் குளம் நிரம்பி விட்டது. ஆனால் அந்த குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு நீர்வழி பாதை இல்லை. இதனால் 5வது வார்டு புவனேஸ்வரி நகரில் உள்ள வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. ஆண்டு கணக்கில் வீடுகளை சுற்றிலும் உள்ள தண்ணீர் செல்வதற்கான நீர் வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் தேங்கியிருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. வீடுகளை சுற்றிலும் உள்ள மழை தண்ணீரை அகற்றக்கோரும் பொது மக்களின் ஆதங்கம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை