உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டிங் வாலிபால் விளையாட்டை அங்கீகரிக்கக் கோரிக்கை| Coimbatore | sitting volleyball match

சிட்டிங் வாலிபால் விளையாட்டை அங்கீகரிக்கக் கோரிக்கை| Coimbatore | sitting volleyball match

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி கோவையில் மாற்றுத்திறனளிகளுக்கான மாநில அமர்வு கைப்பந்து போட்டி காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. நான்காவது ஆண்டாக கோயம்புத்தூர் பாரா வாலிபால் சங்கம் சார்பாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். லீக் சுற்றுகளாக நடைபெற்ற இறுதி போட்டியில் கோவை மற்றும் கிருஷ்ணகிரி அணிகள் மோதின. வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் கோவை வீரர்கள் அபாரமாக விளையாடி 25 - 21 என்ற கோல் கணக்கில் வென்றனர். வெற்றி பெற்ற அணிக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றுள்ள சிட்டிங் வாலிபால் போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை