ஸ்மார்ட் சிட்டி குளங்கள் ஒர்ஸ்ட் சிட்டி குளங்களான அவலம் | Coimbatore Smart City Lakes
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கோவை மாநகராட்சியில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வ சிந்தாமணி குளம்,செல்வம்பதி குளம் என 7 குளங்களின் கரைப்பகுதிகள் பலப்படுத்தப்பட்டு பல்வேறு பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த குளங்கள் தற்போது சரியாக பராமரிக்கப்படாமலும், புதர் மண்டியும், மக்கள் அமரும் இடங்களில் பழுதடைந்தும் காணப்படுகிறது. மேலும் இங்கு இருக்கும் கழிவறைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பின்றி உள்ளதாகவும், குழந்தைகள் விளையாடும் இடங்களில் மது பாட்டில்கள் உடைத்து கிடப்பதாகவும், குளக்கரைகளில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.