சிகரெட்டா பிடிக்கிற; புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...!
பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற சட்டம் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வரும் நிலையில் கோவையில் முதல் முறையாக இருவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டம், கடந்த 2003 முதல் அமலில் இருந்தாலும், அவற்றை அரசு தீவிரபடுத்தாததால், தொடர்ந்து பாதிப்புகள் இருந்து வருகிறது. கோவையில் பள்ளி, கல்லுாரிகள், கோவில்கள், பஸ் ஸ்டாண்ட், பேக்கரி ஹோட்டல்கள், காவல்நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில், புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பொது இடங்களில் புகை பிடிப்பதின் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 04, 2024