உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மூவர் கைது; மரக்கட்டைகளுடன் லாரி பறிமுதல் | Felling and smuggling of trees

மூவர் கைது; மரக்கட்டைகளுடன் லாரி பறிமுதல் | Felling and smuggling of trees

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன் காட்டெருமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது. இதில் தொடர்புடைய குறு்றவாளிகளை வனத்துறையினர் தேடுகின்றனர். வாகன சோதனை தீவிரமாக நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஓவேலி சாலையில் உள்ள வன சோதனை சாவடியில் வனக்காப்பாளர் அருண் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வன சோதனை அருகே சிமென்ட் சாலை வழியாக கூடலூர் நோக்கி செல்ல முயன்ற மினி லாரியை வனத்துறையினர் மடக்கினர். தார்பாயை பிரித்து லாரியை சோதனை செய்கையில் சில்வர் ஓக் மரக்கட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் காபி தோட்டத்திலிருந்து 29 சில்வர் ஓக் மரங்களை வெட்டி கடத்தியது உறுதியானது. இவ்வழக்கில் டிரைவர் அனில், சுலைமான் மற்றும் அறிவழகன் கைது செய்யப்பட்டனர். சில்வர் ஓக் மரக்கட்டைகளுடன் மினி லாரியை பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் பின்னணி குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பிப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை