கோவையில் இருபது ஆண்டு குப்பை பிரச்னை... இனியாவது தீருமா?
கோவை வெள்ளலுார் மக்களின் தீராத பிரச்னையாக இருப்பது குப்பை கிடங்கு பிரச்னை. அதை தீர்ப்பதற்காக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட பின்னரும் அது முடிவுற்றதாக தெரியவில்லை. இதற்கு காரணம் குப்பை மேலாண்மை பணியை கோவை மாநகராட்சி சரியாக செய்யாதது தான். இதை கண்டித்து அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., இந்த குப்பை கிடங்கு பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஏப் 05, 2024