உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி குழந்தைகள்... Somanur

ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி குழந்தைகள்... Somanur

கோவையை அடுத்த சோமனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, பொதுமக்கள், வியாபாரிகள், வேலைக்கு செல்வோர் என, நாளொன்றுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இப்படி கடந்து செல்வதால் ரயில் மோதி அடிக்கடி உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. இப்பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஐந்து பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் காலையிலும், மாலையிலும் ரயில் தண்டவாளத்தை கடந்தே செல்கின்றனர். உயிரை பணயம் வைக்கும் சூழல் உள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் பெற்றோர்களும், குழந்தைகளும் ரயில் பாதையை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. தண்டவாளத்தை கடக்கும் பொது மக்களின் பாதுகாப்பற்ற சூழல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !