உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / CBSE பள்ளியைச் சேர்ந்த 1000 வீரர்கள் பங்கேற்பு | South zone Hockey Tournament| Mettupalayam

CBSE பள்ளியைச் சேர்ந்த 1000 வீரர்கள் பங்கேற்பு | South zone Hockey Tournament| Mettupalayam

CBSE பள்ளியைச் சேர்ந்த 1000 வீரர்கள் பங்கேற்பு / South zone Hockey Tournament / Mettupalayam கோவை மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான தென் மண்டல ஹாக்கி போட்டி துவங்கியது . ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, தமிழகம், அந்தமான் நிக்கோபார் பகுதியில் இருந்து 56 பள்ளியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர் . லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. அண்டர் 14, 17 மற்றும் 19 பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். இதன் இறுதிப் போட்டியில் நுழையும் அணி, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறும். போட்டிகளுக்கான நடுவர்கள் மற்றும் நிர்வாகிகளை தமிழ்நாடு ஹாக்கி யூனிட் நியமித்துள்ளது. விறுவிறுப்பாக போட்டிகள் நடக்கிறது.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை