வீரர்கள் அபார ஆட்டம் | sports | Kovai
ரீஜினல் அசோசியேஷன் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் சார்பில் கோவையில் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. விளையாட்டு வீரர்களை சி.எஸ். அகடமி பள்ளியின் இயக்குனர் மற்றும் ரைஷ் அசோசியேஷன் செயலாளர் விக்ரம் வரவேற்றார். கேசர் பள்ளியின் செயல் இயக்குனர் மற்றும் ரைஷ் அசோசியேஷன் தலைவர் லலிதா பிரகாஷ் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உட்பட்ட பல மாவட்டங்களைச் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500 கற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் 100, 200, 400 மற்றும் 800 மீட்டர் தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டறிதல் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சி. எஸ். அகாடமி பள்ளியின் மண்டல தலைவர் மேனகா குமரன் பரிசு வழங்கினார்.