கோவை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு ஏற்பாடு | sports | Kovai
தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிபிஎஸ்சி பள்ளிகளின் கூட்டமைப்பான கோவை சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் போதை அடிமைக்கு எதிரான ரன் எகெய்ன்ட்ஸ் ட்ரக் (RUN AGAINST DRUGS) என்ற கருப்பொருளில் பிரம்மாண்டமான மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இதில் 56 பள்ளிகளை சேர்ந்த சுமார் 850 மாணவ மாணவிகள் மற்றும் 350 பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியை தெற்கு உதவி போலீஸ் கமிஷனர் சரவணகுமார் மற்றும் கே ஜி எஸ் ஐ எல் கல்வி குழுமத்தின் மேலாளர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் துவக்கி வைத்தார். சீனியர் பிரிவு மாணவர்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரமும், ஜூனியர் பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நான்கு மற்றும் மூன்று கிலோ மீட்டர் ஓட்டமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டது. பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் காவல்துறை தலைமை அலுவலர்கள் 60 பேர் ஆர்வத்தோடு பங்கேற்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய மாரத்தான் ஓட்டம், விமன்ஸ் பாலிடெக்னிக், அண்ணா சிலை வழியாக சென்று மீண்டும் நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு கோவை சகோதயா கூட்டமைப்பு சார்பில் பதக்கங்கள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை சைனிக் ஸ்கூல் 66 புள்ளிகள் பெற்று தட்டி சென்றது. எஸ் எஸ் வி எம் மேட்டுப்பாளையம் 47 புள்ளிகளையும் பெற்று இரண்டாவது இடத்தை வென்றது மாணவிகளுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை அகரம் பப்ளிக் ஸ்கூல் தாராபுரம் 51 புள்ளிகளை பெற்றும், எஸ் எஸ் வி எம் மேட்டுப்பாளையம் 33 புள்ளிகளை பெற்றும் முறையே முதல் மற்றும் இரண்டாமிடம் வென்றது.