உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | sports | Kovai

மேட்டுப்பாளையம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | sports | Kovai

மேட்டுப்பாளையம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட குறுமைய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகளப்போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. போட்டிகளை மண்டல உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். இதில் குறுமைய அளவில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். துவக்க நாளில் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. மாணவர் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் மகாஜன பள்ளி மாணவன் யாகினேஷ் முதலிடம் வென்றார். இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை முறையே நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் விபின், மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் அச்சுதன் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் சஞ்சய் முதலிடம் வென்றார். எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் தினேஷ்குமார் இரண்டாம் இடத்தையும், பஜங்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் உதயசங்கர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மாணவியர் 19 வயதுக்கு உட்பட்டோர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் சுதர்ஷினி முதலிடம் வென்றார். தமன்னா இரண்டாமிடம், சங்கீதா மூன்றாமிடம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் புஜங்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா முதலிடம் வென்றார். மகாஜனா மேல்நிலைப்பள்ளி மாணவி சஞ்சனாஸ்ரீ இரண்டாமிடம், எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதிக்சா மூன்றாமிடம் வென்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் 600 மீட்டர் ஓட்டத்தில் எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நோகாஸ்ரீ முதலிடம் வென்றார். மகாஜனா மேல்நிலைப்பள்ளி மாணவி சாரா ஏஞ்சலீனா இரண்டாமிடம், எஸ்.ஆர்.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஸ்மிகா மூன்றாமிடம் பெற்றனர்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை