உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விவேக் வித்யாலயா பள்ளி முதலிடம் | sports | Kovai

விவேக் வித்யாலயா பள்ளி முதலிடம் | sports | Kovai

முதல்வர் கோப்பைக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கால் பந்து போட்டி கோவை பாரதியார் பல்கலையிலும், மாணவியருக்கான போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியிலும் நடக்கிறது. மாணவர்கள் பிரிவில், 64 அணிகளும், மாணவியர் பிரிவில், 13 அணிகளும் பங்கேற்றன. இதன் காலுறுதி போட்டிகள் பாரதியார் பல்கலையில் நடந்தது. இதில் சூலுார் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, நேரு மெட்ரிக் மேல்நிலை பள்ளி அணியையும், கே.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி, கிக்கானி பள்ளி அணியையும், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சந்திரகாந்தி மெட்ரிக் பள்ளி அணியையும், புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி அணி, பயனீர் மேல்நிலைப்பள்ளி அணியையும் எதிர்கொண்டன. ஸ்ரீ கிருஷ்ண இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் மாணவியருக்கான கால் பந்து போட்டிகள் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி, 5-3 என்ற கோல் கணக்கில் மைக்கேல் ஜாப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது. புனித ஏன்ஸ் மெட்ரிக் பள்ளி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் மணி மேல்நிலைப்பள்ளி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை