கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு | sports | Kovai
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்துப் போட்டி கோவை மாநகராட்சி மைதானத்தில் துவங்கியது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த் மற்றும் கூடைப்பந்து கழக செயலாளர் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர் பிரிவில் 37 அணிகள் மற்றும் மாணவிகள் பிரிவில் 19 அணிகள் பங்கேற்றன. செப்டம்பர் 19ம் தேதி வரை நடக்கும் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் பிரேம்குமார் செய்திருந்தார்.
செப் 17, 2024