உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெற்றி வாகை சூடிய என்.ஜி.பி. அணி | sports | Kovai

வெற்றி வாகை சூடிய என்.ஜி.பி. அணி | sports | Kovai

கோவை காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரியில் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான ஏ - மண்டல வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் 26 அணிகள் பங்கேற்றன. போட்டியை கல்லுாரி செயலாளர் தவமணி தேவி துவக்கி வைத்தார். பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் காலிறுதியில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி அணி 25-15 மற்றும் 25-18 என்ற புள்ளி கணக்கில் கே.ஜி. கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் போட்டியில் சி.எம்.எஸ். கல்லுாரி அணி 25-21 மற்றும் 25-20 என்ற புள்ளி கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்றது. மூன்றாம் போட்டியில் எஸ்.என்.எஸ். கலை அறிவியல் கல்லுாரி அணி 25-20 மற்றும் 25-18 என்ற புள்ளி கணக்கில் எஸ்.ஆர்.எம்.வி. கல்லுாரி அணியை வென்றது. நான்காம் ஆட்டத்தில் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரி அணி 25-13 மற்றும் 25-10 என்ற புள்ளி கணக்கில் சுகுணா கல்லுாரி அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த முதல் அரையிறுதியில் டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரி அணி 2-0 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எஸ். கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் அரையிறுதியில் கொங்குநாடு கல்லுாரி அணி 2-0 என்ற செட் கணக்கில் சி.எம்.எஸ். கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில் டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரி அணி 2-0 என்ற செட் கணக்கில் கொங்குநாடு கல்லுாரி அணியை வீழ்த்தி முதலிடத்தை தட்டி சென்றது. மூன்றாம் இடத்தை சி.எம்.எஸ். கல்லுாரி அணியும், நான்காம் இடத்தை எஸ்.என்.எஸ். கல்லுாரி அணியும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி துணை முதல்வர் சரவணன் பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் தனசிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ