மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஜூன் 25ல் துவக்கம் | Sports | Pune
தேசிய அளவிலான ஜூனியர், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடக்கிறது. இப்போட்டியில் 28 மாநிலங்களில் இருந்து 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 18 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் ஆண்களுக்கான போட்டி வரும் 25ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணிக்காக பயிற்சி முகாம் கோவை மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் நான்கு நாட்கள் நடக்கிறது. முகாமை கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், மாவட்ட ரக்பி சங்கச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் துவக்கி வைத்தனர். முகாமில் 18 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நான்கு நாட்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் புனேவில் வரும் 25ம் தேதி துவங்கும் தேசிய போட்டியில் தமிழக அணி சார்பில் களமிறங்குகின்றனர்.