சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி | sports | Udumalpet
உடுமலை அருகே கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் கோவை சகோதயா பன்னாட்டு பள்ளிகளுக்கு இடையேயான 45வது எறிபந்து போட்டி நடைபெற்றது. போட்டியை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பானுமதி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார். இப்போட்டியில் 17 பள்ளிகளைச் சார்ந்த அணிகள் பங்கேற்றன. 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதலிடம், யுனைடெட் பப்ளிக் பள்ளி இரண்டாமிடம், ARB இன்டர் நேஷனல் பள்ளி மூன்றாமிடம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நவபாரத் நேஷனல் பள்ளி முதலிடம், உடுமலை நேஷனல் மாடல் பள்ளி இரண்டாமிடம், விஷ்வா சிஷ்யா வித்யாலயா பள்ளி மூன்றாமிடம் மற்றும் G.R.D. பப்ளிக் பள்ளி நான்காமிடம் பெற்றது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவை நேஷனல் மாடல் பள்ளி முதலிடம், SSVM உலகப் பள்ளி இரண்டாமிடம், நவ பாரத் நேஷனல் பள்ளி மூன்றாமிடம் மற்றும் நொய்யல் பப்ளிக் பள்ளி நான்காமிடம் பெற்றது. ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி தட்டி சென்றது.