உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 2,500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு | Sports | Covai

2,500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு | Sports | Covai

கோவை எஸ்.என்.எஸ். பாராமெடிக்கல் கல்லுாரி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் எஸ்.என்.எஸ். டெக்னாலஜி கல்லுாரியில் நடைபெற்றது. வாலிபால், கோ கோ, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கபடி, டென்னிகாய்ட், த்ரோபால் உள்ளிட்ட போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகள் பிரிவு கோ கோ காலிறுதிப் போட்டியில் எஸ்.என்.எஸ். கல்லுாரி அணி 20 - 2 என்ற புள்ளிக் கணக்கில் இந்துஸ்தான் கல்லுாரி அணியை வீழ்த்தியது. த்ரோபால் காலிறுதிப் போட்டியில் எஸ்.என்.எஸ். கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் அபிராமி கல்லுாரி அணியை வீழ்த்தியது. மாணவர் பிரிவு கால்பந்து இரண்டாம் சுற்றுப் போட்டியில் யுனைடெட் கல்லுாரி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் பி.ஜி.பி. நிர்சிங் கல்லுாரி அணியை வீழ்த்தியது. கபடி மூன்றாம் சுற்றில் கோபி வெங்கடேஷ்வரா கல்லுாரி அணி 26 - 22 என்ற புள்ளிக் கணக்கில் ஈரோடு பார்மசி அணியை வீழ்த்தியது.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !