சாம்பியன் பட்டம் வென்ற கலை அறிவியல் மாணவர்கள் | University sports day celebration
கோவை ஈச்சனாரி கற்பகம் நிகர்நிலைப் பல்கலையின் விளையாட்டு தின விழா பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. போட்டியை துணை வேந்தர் வெங்கடாஜலபதி துவக்கி வைத்தார். இதில் கலை அறிவியல், பொறியியல், மருந்தியல், கட்டடவியல் துறைகளை சேர்ந்த 3000க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கான தடகளம், வாலிபால், த்ரோபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கலை அறிவியல் மாணவர்கள் பிரிவில் பி.காம் அணியும், பொறியியல் மாணவர்கள் பிரிவில் ட்ரிபிள் இ அணியும், கட்டடவியல் மற்றும் மருந்தியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அணியும் முதலிடம் பிடித்தனர். 125 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கலை அறிவியல் மாணவர்கள் தட்டிச் சென்றனர். 85 புள்ளிகள் பெற்று மருந்தியல் மாணவர்கள் அணி இரண்டாமிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாரதியார் பல்கலை உடற்கல்வி துறை பேராசிரியர் அண்ணாதுரை பரிசுகளை வழங்கினார். கற்பகம் பல்கலை பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.