உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திறமையை வெளிக்காட்டிய இளம் வீரர், வீராங்கனைகள் | sports meet | covai

திறமையை வெளிக்காட்டிய இளம் வீரர், வீராங்கனைகள் | sports meet | covai

திறமையை வெளிக்காட்டிய இளம் வீரர், வீராங்கனைகள் / sports meet / covai பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடந்து வருகின்றது. கோவை எஸ்.எஸ்., குளம் குறுமைய அளவிலான போட்டிகள், சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நடக்கிறது. சிலம்பம் போட்டியில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஒற்றைக்கம்பு வீச்சில், ஆகாஷ், ஹரிஷ், இனியன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இரட்டை கம்பு வீச்சு போட்டியில், அகிலேஷ், ரகுவர்மன், குமரகுரு ஆகியோரும், ஒற்றைக்கம்பு வீச்சு மாணவியர் பிரிவில், யுவஸ்ரீ, ஜீவிதா, லிஜன்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், இரட்டை கம்பு வீச்சில் தனா ஸ்ரீ, ஜானவி ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும் பிடித்தனர். அதேபோல், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இரட்டைக்கம்பு வீச்சில் சர்வேஷ், கிருஷ்ணா, குருபிரசாந்த் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரித்திஷ் சர்மா, ஸ்ரீவர்சன், ஆகாஷ்குமார் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இரட்டை கம்பு வீச்சில் சர்வேஷ், கார்த்திகேயன் ஆகியோர் முதல் இரு இடங்களையும் பிடித்தனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 30 கிலோவுக்கு கீழ் கம்புச்சண்டை போட்டியில் சஞ்சய், நரசிம்மன், லட்சுமணன் காந்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றனர். தொடர்ந்து, 40 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நிகிலேஷ், சையதர்சாத், ரஞ்சித் ஆகியோரும், 35 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கவின், சாய் சபரிநாதன், மதிவந்தன் ஆகியோரும், 40 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் பூஜித், சந்தோஷ், கிரிஷி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி