கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | sports meet | covai
கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு / sports meet / covai கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 66வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அ-குறுமைய தடகளப் போட்டிகளை தேவாங்க அரசு உதவிபெறும் பள்ளி நடத்தி வருகிறது. கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய தடகளப் போட்டியில் மாணவ, மாணவியர் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீளம் தாண்டுதலில் கிஷோர், முகமது பரான், பாதில் ரகுமான் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து 400 மீட்டர் ஓட்டத்தில் நிகேஷ், ஜெய்வந்த், கவுதம் ராம் ஆகியோர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் விசால், அப்துல்லா, துளிர் மதியன் ஆகியோரும், 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் நதியா, மிர்னா பிரியா, விவேகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். அதேபோல் 1,500 மீட்டர் ஓட்டத்தில் அனிதா, கிருத்திகா, மீனா லோச்சனா ஆகியோரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் ராஜூ, அன்புச்செல்வன், சஞ்சை குமார் ஆகியோரும், 400 மீட்டர் ஓட்டத்தில் விஷ்ணு சுபதேவ், கமலேஷ், மஹாராஜா ஆகியோரும், வட்டு எறிதல் போட்டியில் ஆரிப் முகமது, ராஜூ, மாதேஸ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றனர்.