உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கபடி, கோ கோ போட்டிகளில் இளம் வீரர்கள் அசத்தல் | Sports

கபடி, கோ கோ போட்டிகளில் இளம் வீரர்கள் அசத்தல் | Sports

சென்டைஸ் எனப்படும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் இன்டர் இன்ஜினீயரிங் கல்லுாரிகளுக்கு இடையேயான 13 ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் கோவையில் கோலாகலமாக துவங்கியது. மாணவர்கள் பிரிவு கபடி மற்றும் கோ கோ போட்டிகள் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் இன்றும், நாளையும் நடக்கிறது. போட்டியை கல்லுாரி முதல்வர் பவுல்ராஜ் துவக்கி வைத்தார். ஐ.டி. துறைத் தலைவர் சுரேஷ்குமார், உடற்கல்வி இயக்குனர் வேலுசாமி ஆகியோர் உடனிருந்தனர். கபடி முதல் போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி அணி 32 - 30 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்.என்.எஸ். இன்ஜினீயரிங் கல்லுாரியையும், இரண்டாம் போட்டியில் ஈரோடு செங்குந்தர் இன்ஜினீயரிங் கல்லுாரி அணி 26 - 23 என்ற புள்ளிக் கணக்கில் ஈரோடு நந்தா இன்ஜினீயரிங் கல்லுாரியையும் வீழ்த்தின. கோ கோ முதல் போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி அணி 21 - 20 என்ற புள்ளிக் கணக்கில் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியையும், இரண்டாம் போட்டியில் பி.எஸ்.ஜி. டெக் கல்லுாரி அணி 21 - 18 என்ற புள்ளிக் கணக்கில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியையும், மூன்றாம் போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி 17 - 16 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்.என்.எஸ். இன்ஜினீயரிங் கல்லுாரி அணியையும் வீழ்த்தின.

பிப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ