BC, MBC விடுதி மாணவ, மாணவிகள் அசத்தல் | Sports
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நல விடுதி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. போட்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் முருகேசன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அத்லெட்டிக் பயிற்சியாளர்கள் பத்மாவதி மற்றும் மோத்தி அருண் ஒருங்கிணைத்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 24 விடுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று இடங்களை பிடித்த 150 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதேபோல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் தேர்வாகும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர். ஏற்பாடுகளை விடுதி காப்பாளர்கள் ராஜேந்திரன் மற்றும் மயில்சாமி செய்தனர்.