பெண்கள் பிரிவில் போனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் எ அணி சாம்பியன்
போனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மாவட்ட த்ரோபால் சங்கம் சார்பில் மாநில அளவிலான 2 வது த்ரோபால் போட்டிகள், கோவை கலிக்கநாயக்கன்பாளையம் நாகினி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளி போட்டிகள் நடந்தன. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில், சென்னை காபின்ஸ் கிளப் அணி முதல் இடத்தை பிடித்தது. ஓசூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2ம் இடத்தையும், ஈரோடு மெஜஸ்டிக் த்ரோபால் கிளப் 3ம் இடத்தையும், கோவை போனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் போனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் எஅணி முதல் இடம் பிடித்தது. 2ம் இடத்தை உடுமலைப்பேட்டை ஸ்பார்கர்ஸ் அணியும், 3ம் இடத்தை மெஜஸ்டிக் த்ரோபால் கிளப் அணி, 4ம் இடத்தை போனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பி அணியும் பிடித்தன. வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.