உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு ஏற்பாடு | sports | Kovai

கோவை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு ஏற்பாடு | sports | Kovai

கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் போதை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிளக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு நேரு நர்சிங் கல்லூரி ஆசிரியர் பரசுராம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பிக் சிட்டி தலைவர் உமர்பாரூக் துவக்கி வைத்தார். மாசானிக் மருத்துவமனை ஊழியர்கள் போதையின் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து 18 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் ஓப்பன் பிரிவில் செவன்ஸ் கால்பந்து போட்டியை போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் துவக்கி வைத்தார். நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலிருந்து 32 அணிகள் பங்கேற்றன. 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், ஐ.எஸ்.ஏ.எப்.சி அணி. 5-0 கோல் கணக்கில் ஸ்கூல் பிரண்ட்ஸ் அணியை வென்றது. ஓப்பன் பிரிவில் டி.எப்.எஸ்.சி.ஏ. அணி, ட்ரீம் எப்.சி. அணியை எதிர்கொண்டது. ஆட்ட முடிவு நேரம் வரை இரு அணியினரும் கடுமையாக போராடியும் கோல் போடவில்லை. இதையடுத்து ஆட்டம் டை - பிரேக்கர் செய்யப்பட்டது. இதில் இரு அணியினரும் 5 -5 என சமநிலை பெற்றனர். இதனால் வெற்றிக்கான அணியை கண்டறிய டாஸ் போடப்பட்டது. இதில் ட்ரீம் அணி வென்றது. காலிறுதியில் கசின் அணி ட்ரீம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து கைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இரு பிரிவுகளிலும் அரையிறுதி, இறுதி போட்டிகள் நடக்கிறது. போட்டிகளை சாலிடாரிட்டி அமைப்பின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் சுல்தான் ஒருங்கிணைத்தார்.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ