உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விறுவிறுப்பான ஆட்டம் | sports

விறுவிறுப்பான ஆட்டம் | sports

விறுவிறுப்பான ஆட்டம் / sports / covai கோவை மற்றும் தொட்டியத்தில் நடக்கும் மாநில கூடைப்பந்து போட்டிக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தலா, 15 வீரர், வீராங்கனையர் என, 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில கூடைப்பந்து ஜூனியர் அணி தேர்வு போட்டி கோவையில் வரும் 29 முதல் ஏப்ரல் 1 ம் தேதி வரை ஆண்களுக்கும், ஏப்ரல் முதல் வாரத்தில் தொட்டியத்தில் பெண்களுக்கும் நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள திருப்பூர் மாவட்ட ஜூனியர் கூடைப்பந்து அணிக்கான தேர்வு எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். இதில் மாவட்டத்தில் இருந்து 60 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் தலா 15 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாவட்ட அளவிலான பயிற்சி முடித்து மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ