32 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Dinamalar| Sri Krishna Education group| Cricket| League Tournament| C
32 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Dinamalar| Sri Krishna Education group| Cricket| League Tournament| Covai தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கோவையில் நடக்கிறது. போட்டிகள் பிப்ரவரி 2ம் தேதி துவங்கிய நிலையில் , வரும் 7ம் தேதி வரை போட்டி நடைபெறும். டி-20 முறை போட்டியில் 32 அணிகள் களத்தில் உள்ளனர். எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் எஸ்.என்.எம்.வி., கல்லுாரியும், எஸ்.டி.சி., கல்லுாரியும் மோதினர். பேட்டிங் செய்த எஸ்.டி.சி., அணியினர் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன் எடுத்தனர். எஸ்.என்.எம்.வி., அணியினர் 17.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். நான்கு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய எஸ்.என்.எம்.வி., வீரர் அசோக் ஆட்ட நாயகன் விருது வென்றார். அதைத் தொடர்ந்து பி.எஸ்.ஜி., கலை கல்லுாரியும், ரத்தினம் கல்லுாரியும் மோதின. பி.எஸ்.ஜி., அணியினர் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தனர். ரத்தினம் அணியினர் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 53 ரன் எடுத்து தோல்வி அடைந்தனர். 48 ரன் எடுத்த பி.எஸ்.ஜி., வீரர் சித்தார்த் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி மைதானத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கலை கல்லுாரியும், சி.எம்.எஸ்., கலை கல்லுாரியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி.எம்.எஸ்., அணியினர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தனர். கிருஷ்ணா அணியினர் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன் எடுத்து போராடி தோல்வி அடைந்தனர். பேட்டிங்கில் 63 ரன்கள் எடுத்து, பௌலிங்கில் 4 ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய சி.எம்.எஸ்., வீரர் பிரமோத் ஆட்ட நாயகன் விருது வென்றார். தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியும், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை கல்லுாரியும் மோதின. பேட்டிங் செய்த வி.எல்.பி., அணியினர் 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழந்து 196 ரன் எடுத்தனர். கிருஷ்ணா கல்லூரி அணியினர் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன் எடுத்தனர். 100 ரன் எடுத்த வி.எல்.பி., வீரர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அடுத்ததாக சங்கரா கல்லுாரி மைதானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லுாரியும், குமரகுரு இன்ஜி., கல்லுாரியும் மோதின. ராமகிருஷ்ணா அணியினர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தனர். குமரகுரு கல்லூரி அணியினர் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன் எடுத்து தோல்வி அடைந்தனர். 60 ரன் எடுத்த ராமகிருஷ்ணா வீரர் கிஷோருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது பின்னர், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரியில் கே.பி.ஆர்., கலை கல்லுாரியும், சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியும் மோதின. கே.பி.ஆர்., அணியினர் 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 237 ரன் எடுத்தனர். சக்தி கல்லூரி அணியினர் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 62 ரன் எடுத்தனர். 104 ரன் அடித்த கே.பி.ஆர்., வீரர் அருண்குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாருதி கல்லுாரி அணியும், என்.ஜி.எம்., கல்லுாரியும் மோதினர் மாருதி கல்லுாரி அணியினர் 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 95 ரன் எடுத்தனர். என்.ஜி.எம்., அணியினர் 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 72 ரன் எடுத்தனர். 4 ஓவரில் 5 விக்கெட் எடுத்த மாருதி வீரர் லோகுவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இன்று காலிறுதி போட்டி நடக்கிறது. தொடர்ந்து நடைபெறும் போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.