குன்னூர் நகராட்சி நிர்வாகம் விதிமீறல்
குன்னூர் நகராட்சி நிர்வாகம் விதிமீறல் | Stalins birthday party | the municipal meeting ended in a minute | coonoor நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் இன்று காலை 11.30 மணிக்கு மாதாந்திர கூட்டம் துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதும் ஆல் பாஸ் என கூறி, ஒரே நிமிடத்தில் நகராட்சி கூட்டத்தை முடித்து கொண்டனர். இதுகுறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கேட்ட போது ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்காக முடித்ததாக கூறினர். கவுன்சிலர் உமாராணி கூறும் போது, மக்கள் பிரச்னைக்காக கூட்டம் நடத்தாமல் ஸ்டாலின் பிறந்த நாளுக்காக கூட்டத்தை முடித்து கொண்டதாக கொந்தளித்தார். தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் சரவணகுமார் குருமூர்த்தி, ராஜ்குமார், உமாராணி, லாவண்யா ஆகியோர் நகர மன்ற நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலர்களுக்கு வடை மற்றும் டீ உள்ளே கொண்டு செல்லப்பட்டது. இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆத்துறீங்க என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பினர்.