உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அக்வா குரூப் நிறுவனர் ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில வாலிபால் போட்டி

அக்வா குரூப் நிறுவனர் ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில வாலிபால் போட்டி

அக்வா குரூப் நிறுவனர் ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில வாலிபால் போட்டி | State Level Handball Tournament | Covai அக்வா குரூப் நிறுவனர் ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பைக்கான 55வது மாநில வாலிபால் போட்டி கோவையில் கோலாகலமாக துவங்கியது. இப்போட்டிகள் கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணன் வித்யாலயா வளாகத்தில் உள்ள வெங்கடகிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் துவங்கியது. இதில் இந்தியன் வங்கி, தமிழ்நாடு எலைட், வருமான வரித்துறை, அக்வா பம்ப ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டிஜி வைஷ்ணவா கல்லூரி உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. மாநில அளவிலான போட்டிகள் லீக் முறையில் தினமும் மாலை 5:30 மணி முதல் 2 போட்டிகளாக நடக்கிறது. இமமாதம் 24ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மே 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !