கேரளா அணி சாம்பியன் பட்டம் வென்றது| Sports | State level Tournament| Gudalur
கேரளா அணி சாம்பியன் பட்டம் வென்றது| Sports | State level Tournament| Gudalur நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடந்தது. ஸ்டார் பாய்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் நீலகிரி கோவை கேரளா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பத்து அணிகள் பங்கேற்றனர். மின்னொளியில் போட்டி நடந்தது. இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கேரளா மற்றும் கோவை அணி மோதினர். கேரளா மலப்புரம் அணி முதலிடத்தை தட்டி சென்றது. கோவை அணி இரண்டாம் இடம், கூடலூர் கேம்பஸ் பார்யூ அணி மூன்றாம் இடம் மற்றும் நீலகிரி பி.கே.வி அணி நான்காம் இடம் வென்றனர். முதல் பரிசு 30 ஆயிரம், இரண்டாம் பரிசு 20 ஆயிரம, மூன்றாம் பரிசு பத்தாயிரம் மற்றும் நான்காம் பரிசு 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது. ஸ்டார் பாய்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் அகில் உள்ளிட்ட நிர்வாகிகள் பரிசு வழங்கினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கந்த ரசித்தனர்.