உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கண்டு கொள்ளாமல் பிரசாரத்திற்கு காரில் பறந்த ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ்

கண்டு கொள்ளாமல் பிரசாரத்திற்கு காரில் பறந்த ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ்

கண்டு கொள்ளாமல் பிரசாரத்திற்கு காரில் பறந்த ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ் | Suffering without drinking water நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கையுன்னி P.R.F. பழங்குடி காலனி. இங்கு 35க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிணறு பாழடைந்த நிலையில் உள்ளதால் அந்த தண்ணீரை குடிக்க பயன்படுத்த முடியவில்லை. இதையடுத்து ஊராட்சிக்கு சொந்தமான வேறொரு குடிநீர் கிணற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்தனர். கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் பழங்குடியின மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். குடிநீர் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பயனில்லை. கடுப்படைந்த பழங்குடிகள் காலிக் குடங்களுடன் கையுன்னி- அய்யன்கொல்லி சாலையில் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ் பழங்குடியின மக்களை கண்டு கொள்ளாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு காரில் பறந்தார். குடிநீர் கேட்டு தாசில்தாரிடம் முறையிட்டனர். அவரது அறிவுரைக்கு பின்னர் ஊராட்சி குடிநீர் பணியாளர்கள் சம்பவ இடத்தில் வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பழங்குடியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை