உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் ஏற்பாடு | Table Tennis competition | covai

கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் ஏற்பாடு | Table Tennis competition | covai

கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் மாவட்ட அணிக்காக வீரர்களை தேர்வு செய்யும் 2வது மாவட்ட ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டி கிங்ஸ் அகாடமி ஆஃப் ஸ்போர்ட் அரங்கில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு 11, 13, 15, 17 மற்றும் 19 வயது பிரிவுகளிலும், சீனியர்களுக்கு ஓபன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் 11 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் சுதீப் முதலிடம், ரத்தின கிரிஷ் இரண்டாமிடம் பெற்றனர். 13 வயது பிரிவில் ரேயான்ஸ் முதலிடம், அகில் இரண்டாமிடம் பெற்றனர். 15 வயது பிரிவில் சாய் நிதிஷ் முதலிடம், ரோயான்ஸ் இரண்டாமிடம் பெற்றனர். 17 வயது பிரிவில் சாய் நிதிஷ் முதலிடம், ரேயான்ஸ் இரண்டாமிடம் பெற்றனர். 19 வயது பிரிவில் நரேஷ் முதலிடம், அபிஷேக் இரண்டாமிடம் பெற்றனர். ஆண்கள் பிரிவில் துவாரகேஷ் முதலிடம், நரேஷ் இரண்டாமிடம் பெற்றனர். மாணவியர் 11 வயது பிரிவில் சஹானா முதலிடம், சம்ரிதி இரண்டாமிடம் பெற்றனர். 13 வயது பிரிவில் ஸ்ரீ சசினி முதலிடம், யோகிதா இரண்டாமிடம் பெற்றனர். 15 வயது பிரிவில் காவியாழ் முதலிடம், ஆருத்ரா இரண்டாமிடம் பெற்றனர். 17 வயது பிரிவில் ஆருத்ரா முதலிடம், சுதேஷ்னா இரண்டாமிடம் பெற்றனர். 19 வயது பிரிவில் ஆருத்ரா முதலிடம், சுதேஷ்னா இரண்டாமிடம் பெற்றனர். பெண்கள் ஓபன் பிரிவில் சுதேஷ்னா முதலிடமும், சுருதி இரண்டாமிடம் பெற்றனர். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் சாய் நிதிஷ், நிதிஷ் ஜோடி முதலிடமும், ஆருத்ரா, ஸ்ரீ சசினி ஜோடி இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மே 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை