உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய மாணவர் சேர்க்கை அறிவிப்பு செப்டம்பரில் வெளியிட முடிவு | Coimbatore | Tamil Nadu Agricultural

புதிய மாணவர் சேர்க்கை அறிவிப்பு செப்டம்பரில் வெளியிட முடிவு | Coimbatore | Tamil Nadu Agricultural

புதிய மாணவர் சேர்க்கை அறிவிப்பு செப்டம்பரில் வெளியிட முடிவு | Coimbatore | Tamil Nadu Agricultural University | Cancellation of Degree Admission கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுநிலை பட்ட மேற்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 8ம் தேதி முதல் பெறப்பட்டு அதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வுக்கு 2,881 பேர் விண்ணப்பித்தனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் தங்களது இளநிலை பட்டப்படிப்பை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் முடிக்க இயலும். அதனால் இந்த முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே கால தாமதமாக இளநிலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதில் நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் விதமாக நடப்பு ஆண்டில் முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது. எனவே விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கட்டணங்களும் அவரவர் வங்கி கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும். புதிய மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ