உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டெனிகாய்ட் 14 வயது பிரிவில் எம்.ஜி.எம் அணி முதலிடம் | Coimbatore | Team sports competitions

டெனிகாய்ட் 14 வயது பிரிவில் எம்.ஜி.எம் அணி முதலிடம் | Coimbatore | Team sports competitions

புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட விளையாட்டு போட்டிகள் மதர்லேண்ட் பள்ளி சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் குழு விளையாட்டு போட்டிகள் பாரதியார் பல்கலை மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளில் 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. மாணவர் பிரிவு ஒற்றையர், இரட்டையர் டெனிகாய்ட் அனைத்து வயது பிரிவுகளிலும் மதர்லேண்ட் பள்ளி அணி முதலிடம் பிடித்து அசத்தியது. மாணவர் டெனிகாய்ட் 14 மற்றும் 19 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மதர்லேண்ட் பள்ளி, எம்.ஜி.எம் பள்ளி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 17 வயது ஒற்றையர் பிரிவில் மதர்லேண்ட் பள்ளி முதலிடமும், சிருஸ்டி வித்யாலயா இரண்டாமிடம், இரட்டையர் பிரிவில் மதர்லேண்ட் பள்ளி முதலிடம், எம்.ஜி.எம் இரண்டாமிடம் பிடித்தன. மாணவியர் டெனிகாய்ட் 14 வயது பிரிவில் எம்.ஜி.எம் முதலிடம், மதர்லேண்ட் இரண்டாமிடம், இரட்டையர் பிரிவில் அவிலா முதலிடம், மதர்லேண்ட் இரண்டாமிடம், 17 வயது ஒற்றையர் பிரிவில் அவிலா முதலிடம், மதர்லேண்ட் இரண்டாமிடம், இரட்டையர் பிரிவில் எம்.ஜி.எம் முதலிடமும், மதர்லேண்ட் இரண்டாமிடம், 19 வயது பிரிவில் எம்.ஜி.எம் முதலிடமும், மதர்லேண்ட் இரண்டாமிடம், இரட்டையர் பிரிவில் எம்.ஜி.எம் முதலிடமும், மதர்லேண்ட் இரண்டாமிடம் பிடித்தன. மாணவர்கள் கபடியில் 14 வயது பிரிவில் கனுவாய் அரசு பள்ளி முதலிடம், கோவில்மேடு மாநகராட்சி பள்ளி இரண்டாமிடம், 17 வயது பிரிவில் கீர்த்திமான் முதலிடம், கமலநாதன் மாநகராட்சி பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !