உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் | Temple festival | Panthalur

பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் | Temple festival | Panthalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு பஞ்சோரா பகுதியில் ஸ்ரீ சக்தி முனிஸ்வரர் மற்றும் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் 16ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 10 ம் தேதி கோயில் கமிட்டி தலைவர் ராஜு தலைமையில் கொடியேற்று விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், சிறப்பு பூஜைகள், வாகன ஊர்வலம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மறுநாள் முக்கட்டி மாரியம்மன் கோயிலில் இருந்து பறவை காவடி, பால்குடம், அக்னி சட்டி, மற்றும் வேல் பூட்டி காவடி எடுத்தல் ஊர்வலம் 4 கி.மீ. தூரம் வந்து கோயில் வளாகத்தை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நெலக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம், பஞ்சோரா எஸ்டேட் மேலாளர் ஆனந்தா, நாகப்பா, சமூக ஆர்வலர் சங்கீதா பழனிச்சாமி ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். மாலையில் தேர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை அக்னி காவடி மற்றும் பூகுண்டம் இறங்குதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மே 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ