உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பு இல்லாததால் பழமையான பொக்கிஷம் பாழாகும் அவலம்

பராமரிப்பு இல்லாததால் பழமையான பொக்கிஷம் பாழாகும் அவலம்

பராமரிப்பு இல்லாததால் பழமையான பொக்கிஷம் பாழாகும் அவலம் | The kallapuram Annakaththu bridge is majestic after a century | udumalpet உடுமலையின் தெற்கே 19 கி.மீ. தொலைவில் அமராவதி ஆற்றங்கரையில் கல்லாபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. கல்வெட்டுக்களில் இவ்வூர் விக்ரம சோழ நல்லூர் எனவும், ராஜராஜ வளநாடு எனவும், கரை வழி நாட்டுக் கல்லாபுரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமராவதி அணையிலிருந்து வெளியேறும் நீரானது முதலில் சந்திக்கும் ஊர் கல்லாபுரம் என்பதால் இவ்வூரின் பெரும்பகுதியில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கிறது. சுமார் 2 கி.மீ நீளத்திற்கு தரையிலிருந்து 6 அடி உயரம் தொட்டிப்பாலம் அமைத்து நீரை வேளாண் பணிக்காக கொண்டு செல்லப்படுகிறது. அன்னகத்துப்பாலம் என்று அழைக்கப்படும் இந்த நீர் வழிப்பாலம் கண்ணைக் கவரும் எழில் கொஞ்சும் இயற்கை வளங்கள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு சினிமா சூட்டிங் அடிக்கடி நடத்தப்படுகிறது. 100 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் கல்லாபுரம் தொட்டி பாலத்தில் செடிகள் முளைத்தும், தண்ணீர் கசிவு ஏற்பட்டும் உள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இப்பழமையான பாலத்தை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி