கலெக்டர் ஆபீஸ் ஊழியர் என கூறிய நபரிடம் ₹1.50 லட்சம் கொடுத்து ஏமாந்தது தான் மிச்சம்
கலெக்டர் ஆபீஸ் ஊழியர் என கூறிய நபரிடம் ₹1.50 லட்சம் கொடுத்து ஏமாந்தது தான் மிச்சம் / there is no way get to the agri land / palladam திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த ராயர் பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி வயது 70. விவசாயி. இவரது ஒரு ஏக்கர் விவசாய பூமி ராயர்பாளையத்தில் உள்ளது. நிலத்துக்குச் செல்லும் வழித்தடத்தில் பி.ஏ.பி. கால்வாய் உள்ளது. இதனால் நடை பாதையை பயன்படுத்த முடியவில்லை. வாகனங்கள் செல்ல இயலாது. வாய்க்கால் மீது குழாய் அமைத்து வழித்தடம் அமைக்க அனுமதிக்கும் படி பல்லடம் பி.ஏ.பி. அதிகாரிகள், கலெக்டர் என அனைத்துத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. பாதை கேட்டு கடந்த 32 ஆண்டுகளாக போராடி வரும் பொன்னுசாமியை கலெக்டர் ஆபீசில் வேலை பார்ப்பதாக கூறிய நபர் பாதைக்கு ஏற்பாடு செய்வதாகக்கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தார். பொன்னுசாமிக்கு வயது 70 முடிந்து விட்டது. பாதைக்காக வாழ்நாளில் 50 சதவீதம் செலவிட்டும் ஒன்றும் நடக்கவில்லை. அவருக்கு இறுதி காலம் நெருங்கி விட்டது. தனது ஆயுள் முடிவதற்குள் பாதை ஏற்படுத்திக் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக என பொன்னுசாமி கண்ணீர் மல்க கூறினார்.