உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சக்கணக்கில் விலைபோகும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி

லட்சக்கணக்கில் விலைபோகும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி

கோவை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பர் கிரிஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை ஒருவர் விற்க முயற்சித்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், வனத்துறையினர் விரைந்து சென்று திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை விற்க முயன்றவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ உமிழ்நீர் கட்டியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி குறித்து வனத்துறையினர் கூறியதாவது: திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி என்பது அதன் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேறும் ஒரு வகை திடப் பொருள். இந்த உமிழ்நீர் கட்டியை திமிங்கலம் வாந்தி எடுக்கும் என்றும் சொல்லலாம். அந்த உமிழ் நீர் கட்டியிலிருந்து தான் வாசனை திரவியமான பெர்பியூம் என்ற சென்ட் தயாரிக்கப்படுகிறது. மற்ற பெர்பியூம்களை விட இதில் தயாரிக்கப்படும் பெர்பியூமின் வாசனை நீண்ட நேரம் நிலைத்து இருக்குமாம். திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி வைத்திருப்பது1972-ம் ஆண்டு உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும். கோவையில் ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டியை ரூ. 2 லட்சத்துக்கு விற்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதையும் யாரும் வாங்கவில்லை. லட்சக்கணக்கில் விலை போகும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி