உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பரம்பிக்குளம் கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி நீர் திறப்பு |Thirumoorthy Dam Opened | Udumalpet

பரம்பிக்குளம் கால்வாயில் வினாடிக்கு 250 கன அடி நீர் திறப்பு |Thirumoorthy Dam Opened | Udumalpet

உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இதன் நீர் மட்டம் 60 அடி. மழை காரணமாக நீர் மட்டம் 51 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,021 கன அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 26 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் இரண்டாம் மண்டல பாசன வசதிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி நீரை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். இதனால் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அதேபோல் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தளி வாய்க்காலில் வினாடிக்கு 20 கன அடி நீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், ஈஸ்வரசாமி எம்பி, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !