மாணவர்களின் ஓவிய ஆற்றலை மேம்படுத்தும் கவின் கலை
கவின்கலை என்பது தொன்மையானது; கலைகளில் முதன்மையானதும் கூட. பாறை ஓவியங்கள் தான், ஒரு சமூகத்தின் தொன்மையை அறியக்கூடிய மிக முக்கியமான சான்று. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, கோவை, தேனி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில், நிறைய பாறை ஓவியங்கள் உள்ளன. இருப்பினும், புதுக்கோட்டையில் உள்ள சித்தண்ண வாசல் சுவர் ஓவியம் போன்றவை, தொல்லியல் துறையினரால் மிகச்சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது; இந்த ஓவியங்கள் அஜந்தா, எல்லோரா ஓவியங்களுக்கு நிகராக பேசப்படுகிறது. கவின் கலை என்பது, முதன்மை கலை என்ற நிலையில், அதுதொடர்பாக சிற்பம் உருவாக்குவது. தமிழக பாட திட்டத்தில், ஓவியக்கலை துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. தற்போது, கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், கவின் கலையில் ஆற்றல் பெற்ற ஆசிரியர்களால், அவை கற்பிக்கப்படும் போது தான், மாணவர்களின் ஓவிய ஆற்றல் மேம்படும். கவின் கலை தொடர்பான சிறப்பான, நவீன பாட திட்டத்தை, தமிழக அரசு வடிவமைத்துள்ளது. கவின் கலை கல்லுாரி பாட திட்டத்துக்கு இணையான அந்த பாட திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், மாணவர்களின் கவின் கலை திறமை மேம்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.