/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் | Thotichi Amman temple festival |Melur
பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் | Thotichi Amman temple festival |Melur
மதுரை மாவட்டம் மேலூர் சொக்கம்பட்டி தொட்டிச்சிஅம்மன் கோயிலின் 67ம் ஆண்டு சித்திரை பொங்கல் விழா கடந்த 15 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காப்புகட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மேலூர் ஓட்டப்பிள்ளையார் கோயிலில் இருந்து அலகு குத்தி, பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மண் கலயத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்தனர். கிடா வெட்டி வழிபட்டனர்.
மே 07, 2024