உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீர் இருப்பை பொருத்து 100 நாட்கள் நீர் வழங்கப்படும் |Tirumurthy Dam Water release

நீர் இருப்பை பொருத்து 100 நாட்கள் நீர் வழங்கப்படும் |Tirumurthy Dam Water release

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் 60 அடி நீர் மட்டம் கொண்ட அணை 55 அடியை தொட்டது. இதையடுத்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட பாசன வசதிக்காக அணையில் இருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி நீரை கலெக்டர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார். நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் மகேந்திரன், காஞ்சித்துரை மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர். இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாய் முழு கொள்ளளவான 912 கன அடி வரை அதிகரித்து வழங்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தளி வாய்க்கால் வழியாக வினாடிக்கு 20 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர் இருப்பை பொருத்து மே 5ம் தேதி வரை தொடர்ந்து 100 நாட்களுக்கு இடைவெளிவிட்டு இரண்டரை சுற்றுக்கு மொத்தம் 5,000 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கேயம் வட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தம் 94 ஆயிரத்து 521 ஏக்கர் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ