உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 504 பேர் விறு விறுப்பான ஆட்டம் | Tiruppur | Chess tournament

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 504 பேர் விறு விறுப்பான ஆட்டம் | Tiruppur | Chess tournament

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 504 பேர் விறு விறுப்பான ஆட்டம் / Tiruppur / Chess tournament மாணவ, மாணவியர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை குறு மைய விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. திருப்பூர் வடக்கு குறுமைய செஸ் போட்டி, குமார்நகர் பிஷப் உபகாரசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை பிஷப் பள்ளி தாளாளர் மரிய ஆண்டனி துவக்கி வைத்தார். வடக்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து, 14, 17 மற்றும், 19 வயது பிரிவில், மாணவ, மாணவியர் 504 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், 11 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் தேவதருண், ராஹேஷ் ரோஷன், புஷ்பேந்தர் சிங், மற்றும் மாணவியர் பிரிவில் யாழினி, பாரதி, ரியா வெற்றி பெற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் பிரணவர்ஷன், சஷ்விக் சஷ்வின், மாணவியர் பிரிவில் ராஜேஸ்வரி, சஸ்டிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் லிபிநாதன், வருண்குமார், கோகுல், பெண்கள் பிரிவில், டிரினிடா மெர்சி, அபிநயா, ஆதிபிரகதா வெற்றி பெற்றனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், மாதவன், ஹர் விக்னேஷ், நந்து, பெண்கள் பிரிவில் ஆதிசம்ரிதா, அக்ஷயாதர்ஷினி, அஷ்மிதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை