உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வேளாண் பல்கலையில் நுழைவு கட்டண மோசடி... தினமலர் கள ஆய்வில் அம்பலம்

கோவை வேளாண் பல்கலையில் நுழைவு கட்டண மோசடி... தினமலர் கள ஆய்வில் அம்பலம்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், அமைந்துள்ள தாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணத்திற்கான ரசீது வழங்குவதில் மோசடி நடந்துவருவது தினமலர் நடத்திய கள ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது. கோவையின் பொழுதுபோக்கு தளங்களில் முக்கிய இடமாக, வேளாண் பல்கலையின் தாவரவியல் பூங்கா உள்ளது. பொழுதை கழிப்பதற்காக மட்டுமின்றி, திருமணம், மகப்பேறு காலம், குழந்தைகளுக்கு என பல்வேறு விதமான கமர்சியல் போட்டோ, வீடியோ ஷூட் இங்கு தினந்தோறும் எடுக்கப்படுகிறது. சாதாரணமாக நுழைவுக்கட்டணம், 50 ரூபாயும், கமர்சியல் போட்டோ எடுப்பதற்கு 500 ரூபாயும், வீடியோ எடுப்பதற்கு 2,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. போட்டோ ஷூட் எடுக்க அதிக கட்டணம் வசூலிக்கும் அளவுக்கு உள்ளே,உடைமாற்றக் கூட வசதிகள் எதுவும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கட்டணம் வசூலிப்பதிலும் முறைகேடு நடப்பது தினமலர் நடத்திய கள ஆய்வில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !