8 அணிகள் விறுவிறுப்பாக களம் இறங்க உள்ளனர்| TNPL cricket tournament 2025 | covai
8 அணிகள் விறுவிறுப்பாக களம் இறங்க உள்ளனர்/ TNPL cricket tournament 2025 / covai தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது சீசன், கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. மொத்தம் 32 ஆட்டத்திற்கு பின் ஜூலை 6ம் தேதி இறுதி போட்டி நடத்தப்படும். போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லி, கோவை கிங்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் மோதுகின்றன. முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் மோதுகின்றன. இந்த சீசனின் மொத்த பரிசுத்தொகை 17 கோடி ரூபாய். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 50 லட்சம் மற்றும் ஃபர்ஸ்ட் ரன்னர் அப்பாக (first runner up) வரும் அணிக்கு முப்பது லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.