உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வரவுக்கும் செலவுக்கும் கட்டுப்படியாகாத தக்காளி விலை

வரவுக்கும் செலவுக்கும் கட்டுப்படியாகாத தக்காளி விலை

தமிழகத்தில் ஓசூருக்கு பிறகு தக்காளிக்கு பெரிய மார்க்கெட் எங்கிருக்கிறது என்றால் கோவையை அடுத்த நாச்சிப்பாளையத்தில் தான். சீசன் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான கிலோ தக்காளி இங்கு விற்பனைக்கு வருகிறது. ஆனால் அதற்கான விலை தான் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது. எளிதில் அழுகும் தக்காளிக்கு குளிர்பதன கிடங்கு வேண்டும் என்று விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கும், வாங்கி விற்கும் வியாபாரிகளுக்கும் கட்டுப்படியாகாத நிலை தான் உள்ளது. விவசாயிகளை திண்டாட வைக்கும் தக்காளி விலை சரிவு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை